கிரிக்கெட்

"சச்சினின் அந்த சாதனையை ஜோ ரூட் முறியடித்தால்..." - இங்கிலாந்து முன்னாள் வீரர் ஓபன் டாக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் தன்வசம் வைத்துள்ளார்.

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்தால், அது நம்ப முடியாத சாதனையாக இருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் சமித் படேல் தெரிவித்துள்ளார்.

சச்சின் எனது முன்னுதாரணம்!

இதுகுறித்து சமித் படேல் கூறுகையில், “ஜோ ரூட் அந்த சாதனையை முறியடித்தால், அது நம்ப முடியாத சாதனையாக இருக்கும். நான் வளர்ந்த காலத்தில் இருந்தே சச்சின் டெண்டுல்கர்தான் எனது ஹீரோவும் முன்னுதாரணமும். அவரது சாதனையை யாராவது முறியடித்தால், அது உண்மையிலேயே வியக்கத்தக்கதாக இருக்கும்” என்றார்.

நெருங்கும் ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 2026-ம் ஆண்டு நிலவரப்படி 14,278 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சச்சினின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 1,644 ரன்கள் தேவைப்படுகின்றன.

SCROLL FOR NEXT