image courtesy : Chennai Super Kings/ @ChennaiIPL 
கிரிக்கெட்

'சதம் அடிக்க வேண்டும் என்றால்'.. வெற்றிக்கு பின் சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் கருத்து

நேற்று நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 87 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

டெல்லி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 48-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மல்லுக்கட்டியது. முதலில் விளையாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 87 ரன்கள் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஆட்ட நாயகன் விருதை வாங்கிய சஞ்சு சாம்சன், போட்டிக்குப்பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சஞ்சு சம்சன் கூறியதாவது: சதம் அடிப்பது எப்போதும் சிறப்பானதே. ஆனால் அதற்காக நான் கொஞ்சம் சுயநலமாக நடந்திருக்க வேண்டியிருக்கும். ஒரு ரன் எடுத்து விடுங்கள், நான் சதம் அடிக்கிறேன். என்று நான் நினைக்கவில்லை. அணிக்காக போட்டியை வெல்வதுதான் முக்கியம் என்று எண்ணினேன்” என்றார்.

SCROLL FOR NEXT