கிரிக்கெட்

இந்திய அணி வீரர்களுக்கு கவுதம் கம்பீர் முக்கிய அறிவுரை

தயாரிப்பு மற்றும் உடற்தகுதி குறித்து பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முன்கூட்டியே கைப்பற்றியது. இருப்பினும், கடைசி இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதால் தொடரின் முடிவு 3-2 என அமைந்தது. தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இருந்த இந்திய வீரர்களை, போட்டி முடிந்ததும் டிரெஸ்ஸிங் ரூமில் சந்தித்த தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டிப் பேசினார். அப்போது வீரர்களின் செயல்பாடு, அணியின் ஒற்றுமை, எதிர்காலப் போட்டிகளுக்கான தயாரிப்பு மற்றும் உடற்தகுதி குறித்து பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

பெருமைப்பட வேண்டும்

கம்பீர் தனது உரையைத் தொடங்கும்போது,

இந்தத் தொடர் முழுவதும் வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டத்திற்காக அனைவரும் பெருமைப்பட வேண்டும். நியூசிலாந்து போன்ற வலுவான அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு தொடரைக் கைப்பற்றுவது எளிதான விஷயம் அல்ல . குறிப்பாக, முதல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய வீரர்களுக்குத் தயாராகிக் கொள்ள ஒரு நாள் மட்டுமே கிடைத்திருந்தது. குறுகிய காலத்தில் புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு விளையாடிய விதம் பாராட்டுக்குரியது வீரர்கள் அனைவரும் தங்களது தலையை நிமிர்த்திக்கொண்டு பெருமையுடன் நாடு திரும்பலாம்.

கூட்டு முயற்சி

ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியிருப்பதே அணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தை வெற்றிகரமாக அமைத்து, அடுத்ததாக விளையாடவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு நல்ல உத்வேகத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT