கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை உயர்வு

ஒரு அணி 14 லீக் போட்டிகளில் விளையாடும்.

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட் டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் மொத்தம் இறுதிப்போட்டியையும் சேர்த்து 74 போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒரு அணி 14 லீக் போட்டிகளில் விளையாடும்.

இந்த நிலையில், 2028 ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒரு அணி 18 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். மொத்தம் 94 போட்டிகள் நடைபெறுகிறது. இருப்பினும் இதை தொடர்பாக அதிகாரபூர்வன அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.