கிரிக்கெட்

இன்னும் 33 ரன்கள்... இன்று அபிஷேக் சர்மாவுக்கு காத்திருக்கும் வரலாற்று சாதனை

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தூர்,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய மைல்கல்லை எட்டும் முனைப்பில் உள்ளார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 2,000 ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற அவருக்கு இன்னும் 33 ரன்களே தேவைப்படுகிறது.

1-1 என சமநிலையில் தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

33 ரன்கள்

அபிஷேக் சர்மா இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில் 1,967 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் மேலும் 33 ரன்கள் எடுத்தால், 2,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

இதன் மூலம் இந்த சாதனையைப் படைக்கும் இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் இடம்பெறுவார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்ற அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியில் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 2,000க்கும் அதிகமான ரன்களைக் குவித்த மற்ற 5 வீரர்கள்:

1. ரோஹித் சர்மா – 4,231 ரன்கள்

2. விராட் கோலி – 4,188 ரன்கள்

3. சூர்யகுமார் யாதவ் – 3,272 ரன்கள்

4. ஹார்திக் பாண்டியா – 2,288 ரன்கள்

5. கே.எல். ராகுல் – 2,265 ரன்கள்

SCROLL FOR NEXT