தம்புல்லா,
இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா - ஏ அணி இன்று லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-ஏ அணியை எதிர்கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்-ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா-ஏ அணிக்கு தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் வைபவ் சூர்யவன்சி சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். அதிரடியாக விளையாடிய சூர்யவன்சி 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அரைசதம் கடந்து அசத்தினார். 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த ஆர்யா ஆட்டமிழந்தார். ருதுராஜ் 31 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதையடுத்து 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் பஹீர் ஷா அரை சதம் கடந்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பைசல் ஷினோஜாடா 46 ரன்னிலும், கேப்டன் இம்ரான் மிர் 30 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 36.5 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.