இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கனுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 210 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. தொடக்கத்தில் விக்கெட்டுகளைப் பாதுகாத்து ரன் சேர்க்க வேண்டிய சூழலில் இந்திய பேட்ஸ்மேன்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினர்.இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 18 ரன்கள், விராட் கோலி 5 ரன்களில் வெளியேறினார்.
இந்திய அணிக்காக அக்சர் படேல், இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அக்சர் படேல், இஷான் கிஷன் தலா 46 ரன்கள் எடுத்தனர்.
மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் வராததால் இந்திய அணி 250 ரன்களைக் கூட எட்ட முடியாமல் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் , ஜேக்கப் டபி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.