காலே,
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவான் (190 ரன்கள்) புஜாரா(153) ஆகியோர் அபார ஆட்டத்தின் மூலம் ரன்மழை பொழிந்தது.
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 133.1 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 600 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் நுவன் பிரதீப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இலங்கை அணி தற்போது அதன் முதல் இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.