கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கால்பந்துபோட்டி திறமையைச் சோதிக்கும் வாய்ப்பாக அமையும்: பயிற்சியாளர் கலீத்

தலைமைப் பயிற்சியாளர் கலீத் ஜமீல் 23 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை, தலைமைப் பயிற்சியாளர் கலீத் ஜமீல் 23 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தார்.

திறமையைச் சோதிக்கும்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு நட்புறவுப் போட்டிகள் நவம்பர் 12 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. முதல் போட்டி ஆக்லாந்திலும், இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சிலும் நடைபெறுகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவமிக்க கோல்கீப்பருமான குர்பிரீத் சிங் சந்து அணியில் இடம்பெறாதது முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. பிரேசில் அணிக்கு எதிரான கடந்த மாதப் போட்டியில் இந்தியா 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 2026 FIFA உலகக் கோப்பையில் விளையாடிய நியூசிலாந்து அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்கு முக்கியமான சவாலாக இருக்கும்.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கலீத் ஜமீல் கூறுகையில்,

நியூசிலாந்து உலகக் கோப்பையில் விளையாடிய வலுவான அணி. அவர்களுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் திறமையைச் சோதிக்கும் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பாகத் தயாராகி ஒழுக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் செயல்பாட்டை மேம்படுத்துவதே தங்களது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT