கிரிக்கெட்

கடைசி டி20 போட்டியில் இந்தியா தோல்வி... 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.

ஹாமில்டன்,

5-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

டி20

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது. முதல் 3 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

192 ரன்கள் இலக்கு

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் அரைசதம் அடித்தனர்.

நியூசிலாந்து வெற்றி

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர் டிம் செய்பர்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 50 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார்.

டேரில் மிட்செல் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, கடைசி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இருப்பினும், தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

SCROLL FOR NEXT