இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர்கள் சால்ட் 44 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் தொடங்கியது. துவக்கத்தில் இருந்தே இந்திய அணி திணறியது. 5 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகள் பறிகொடுத்த இந்திய அணியில் அதில் இருந்து மீளவில்லை. 11.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
5 போட்டிகள் கொண்ட 20 ஓவர்கள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்ற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடரை சமன் செய்ய மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.