இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 சர்வதேச அணிக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாடிய அவர், தற்போது தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்து தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புவனேஷ்வரின் வருகை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்திய அணியின் பந்துவீச்சில் சமீபகாலமாக அனுபவம் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், புவனேஷ்வர் குமாரின் வருகை அணிக்கு உதவும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணியில் பல புதிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றனர் என்றும், அந்தச் சூழலில் புவனேஷ்வர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், டி20 கிரிக்கெட்டில் எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது குறித்து புவனேஷ்வருக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.