கிரிக்கெட்

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா பேட்டிங் தேர்வு

இப்போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ,

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா - ஜப்பான்

ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒரேஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாட உள்ளது.

இந்தியா, ஜப்பான் இடையேயான தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே இந்த டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தியா - ஜப்பான் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

டாஸ்

ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

5 ஓவர்கள்

மழை காரணமாக போட்டி கால தாமதமானது. இதனால் இப்போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT