புதுடெல்லி,
10-வது டி20 உலகக் கோப்பை தொடரில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் கடந்த 15-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை இல்லாத வகை யில் அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. போட்டியை ஒளிபரப்பும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் இந்த ஆட்டத்தை 16.3 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டது. இது கடந்த 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதியதை பார்த்தவர்களை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.