கிரிக்கெட்

இலங்கை லெவனுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி 357 ரன் குவிப்பு

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி காலேயில் தொடங்குகிறது.

இலங்கை கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்துள்ளது. தேவ்தத் படிக்கல் சதம் அடித்தார்.

கொழும்பு,

பயிற்சி ஆட்டம்

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி காலேயில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, இலங்கை கிரிக்கெட் வாரிய லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் கொழும்பில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதலில் ஆடிய இலங்கை லெவன் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 363 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் இலங்கை லெவன் அணி டிக்ளேர் செய்தது. கேஷரா நுவந்தா 9 ரன்னுட னும், திலும் சுதீரா ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா தரப்பில் சுழற் பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

தேவ்தத் படிக்கல் சதம்

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (0) 2-வது பந்திலேயே விஷ்வா பெர்னாண்டோ பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதனையடுத்து தேவ்தத் படிக்கல், தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் இணைந் தார். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மழையால் சிறிது நேரம் தடை பட்டு தொடர்ந்த ஆட்டத்தில் ஸ்கோர் 96 ரன்னை எட்டிய போது (23.2 ஓவரில்) பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் 40 ரன்னில் (67 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேஷரா நுவந்தா சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து ரவீந்திர ஜடேஜா, தேவ்தத் படிக்கலுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று அபார மாக ஆடிய தேவ்தத் படிக்கல் 121 பந்துகளில் சதத்தை எட்டினார். 103 ரன்னில் இருந்த போது தேவ்தத் படிக்கல்,அடுத்த வீரர்களுக்கு வழிவிடும் வகையில் வெளியேறினார். அடுத்து அந்த ரிஷப் பண்ட் (2 ரன்), துருவ் ஜூரெல் (1 ரன்) ரமேஷ் மென்டிஸ் பந்து வீச்சில் விக் கெட்டை பறிகொடுத்தனர்.

நன்றாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 63 ரன்னில் (117 பந்து, 7 பவுண்டரி) அடுத்தவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 'ரிட்டயர் ஹர்ட்' முறையில் வெளியேறினார். இதனையடுத்து வந்த குல்தீப் யாதவ் ஒரு ரன்னில் ரிட்டயர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். பய னுள்ள பங்களிப்பை அளித்த மானவ் சுதர் 41 ரன்னிலும் (90 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக் சர்), முகமது சிராஜ் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். முகமது சிராஜ் ஆட்டமி ழந்ததும் மீண்டும் களம் புகுந்த தேவ்தத் படிக்கல் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந் தார். சரன்ஷ் ஜெயின் 22 ரன்னில் ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இந்தியா 357 ரன்

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத் துள்ளது. தேவ்தத் படிக்கல் 142 ரன்களுடனும் (164 பந்து, 18 பவுண்டரி). கடைசி ஓவரில் 4 சிக்சர் தூக்கி அசத்திய குர்னூர் பிரார் 36 ரன்களுடனும் (18 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை தரப்பில் ரமேஷ் மென்டிஸ், அசங்கா மனோஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.