கிரிக்கெட்

இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும்: கிரிக்கெட் வாரிய செயலாளர் தகவல்

ஆமதாபாத்துக்கு மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகின.

புதுடெல்லி,

இலங்கை கிரிக்கெட் அணி டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இரண்டு வாரம் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டெல் லியில் டிசம்பர் 13-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி பெங்களூருவில் 16-ந் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி ஆம தாபாத்தில் 19-ந் தேதியும், முதலாவது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் 22-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி கட்டாக் கில் 24-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி புனேயில் 27-ந் தேதியும் நடக்கிறது.

டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டெல்லியில் இருந்து ஆமதாபாத்துக்கு மாற்றப்படுவதாக செய்திகள் வெளியா கின. இதனை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'டெல்லியில் நடக்க உள்ள இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி ஆமதாபாத்துக்கு மாற்றப்படலாம் என்று வெளியான தகவல் தவறானது. அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் இரு நாடுகள் இடையிலான போட்டி நடை பெறும் இடங்கள் ஒரு நிலையான கொள்கையை பின்பற்றியே ஒதுக்கப்படுகின்றன' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT