கிரிக்கெட்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 12 சர்வதேச போட்டியில் ஆடும் இந்தியா

நியூசிலாந்து மண்ணில் ஒரே தொடரில் 12 ஆட்டங்களில் ஆடுவது இதுவே முதல் முறையாகும்.

ஆக்லாந்து,

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தங்கள் அணி உள்ளூரில் கோடைகாலத் தில் விளையாடும் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் என மொத்தம் 12 சர்வதேச போட்டிகளில் ஆடுகிறது. வெளிநாட்டு அணி நியூசிலாந்து மண்ணில் ஒரே தொடரில் 12 ஆட்டங்களில் ஆடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அக்டோ? பர் 22-ந்தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. எஞ்சிய ஆட்டங்கள் அக்.24, 27,30, நவ.1 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இதே போல் ஒரு நாள் ஆட்டங் கள் நவ.4, 7, 10, 13, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிகள் வெலிங்டன் (நவ.19-23), கிறைஸ்ட்சர்ச் (நவ.27- டிச.1) ஆகிய இடங்களில் நடக்கிறது.