கிரிக்கெட்

கடைசி பந்தில் ஆசியக் கோப்பை வெற்றி... இந்திய இளம் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

யு 19 ஆசியக் கோப்பையை இந்திய அணி மீண்டும் கைப்பற்றியது.

புதுடெல்லி,

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஊக்கமளிக்கும்

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு சிறப்பான நாள்! இன்று சிறப்பாக விளையாடி ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பையை வென்ற நமது இளம் வீரர்களைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்களின் வெற்றி பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

கடைசி பந்தில் திரில் வெற்றி

ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உஸ்மான் கான் 107 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 338 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, கடைசி பந்தில் 339 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது. கேப்டன் லக்‌ஷ்யா ராய்ச்சந்தனி 80 ரன்களும், ஆர்யவீர் சேக்வத் 58 ரன்களும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பிய நிலையில், மொஹித் உல்வா 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இந்திய அணி ஆசியக் கோப்பையை மீண்டும் கைப்பற்றியது.

SCROLL FOR NEXT