கிரிக்கெட்

சென்னையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒரு நாள் போட்டி... டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

ஜூன்.20ந் தேதி நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது.

சென்னை,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரு நாள் ஆட்டங்கள் முறையே தர்மசாலா (ஜூன்.13), லக்னோ (ஜூன். 17), சென்னை (ஜூன்.20) ஆகிய இடங்களில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இதில் சென்னையில் நடக்கும் ஒரு நாள் போட்டிக்கான ஆன்-லைன் டிக்கெட் விற்பனை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 11.15 மணிக்கு தொடங்குகிறது. ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500, ரூ.3,000, ரூ.5,000, ரூ.7,500, ரூ.10 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. DISTRICT BY ZOMATO என்ற செயலி அல்லது district.in என்ற இணையதளத்தின் மூலமாக டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். மைதானத்தில் உள்ள கவுண்ட்டர் மூலம் டிக்கெட் விற்பனை கிடையாது.

இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.