கிரிக்கெட்

ஆப்கான், அயர்லாந்து, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி

இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடர் போட்டி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் (ஜூன் 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை) விளையாடுகிறது. இதனையடுத்து இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் (ஜூலை 1-19) விளையாடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முறைப்படி அறிவித்தது. இதன்படி இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஜூன் 26-ந் தேதியும், 2-வது போட்டி ஜூன் 28-ந் தேதியும் பெல்பாஸ்ட் நகரில் நடக்கிறது. இந்த போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அணி 3 முறை (2018, 2022, 2023) அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால் 2007-ம் ஆண்டுக்கு பிறகு பெல்பாஸ்ட் நகரில் ஆடுவது இதுவே முதல் முறையாகும்.

SCROLL FOR NEXT