இந்தூர்,
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்றதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.