நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 3 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து, இந்தியா இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஆக்லாந்தில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு இப்போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.