கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது.

டெல்லி,

20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பேட்மிண்டன், டென்னிஸ், குத்துச்சண்டை, ஹாக்கி, கால்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகள் நடைபெற உள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டும் இடம்பெற்றுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷிபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், கமலினி, பார்தி புல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா, கிராந்தி கவுட், அருந்ததி, ஷ்ரேயங்கா, ராதா, நந்தினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.