கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவுக்கு 14ம் தேதி திருமணம்

நீண்டநாள் தோழியான வான்ஷிகாவை வரும் 14ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனது நீண்டநாள் தோழியான வான்ஷிகாவை வரும் 14ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.