கிரிக்கெட்

ஆஸ்திரேலிய யு-19 அணியில் இந்திய வம்சாவளி வீரர்... இந்திய சுற்றுப்பயணத்துக்கான அணி அறிவிப்பு

இப்போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன.

சென்னை,

இந்தியாவில் நடைபெறவுள்ள பல்வகை (Multi-format) கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் (U-19) ஆண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் படேல் இடம்பிடித்துள்ளார்.

16 பேர் கொண்ட அணி அறிவிப்பு

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த சுற்றுப்பயணத்திற்காக 16 பேர் கொண்ட அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான வில் பைரம் மற்றும் கேசி பார்ட்டன் ஆகியோர் அணியை வழிநடத்த உள்ளனர்.

இந்தியாவில் 5 போட்டிகள்

இந்த தொடரில் இந்திய யு-19 அணிக்கு எதிராக மூன்று 50 ஓவர் போட்டிகளிலும், இரண்டு 4 நாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இப்போட்டிகள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகின்றன.

ஆஸ்திரேலிய யு-19 அணி

கேசி பார்ட்டன், ஹேடன் பார்புலோவி, எலி பிரைன், வில் பைரம், பிளேக் கேட்டில், ஜேக் சோஸ்னெக், ஸ்பென்சர் கிரீன், கானர் கிரிகோரி, சார்லி ஹென்டர்சன், செட் ஹோலிக், மேத்யூ லோ, நீல் படேல், ஜேக்கப் பியட்ஸ், பேட்ரிக் சல்லிவன், தியோ சிங்கோஸ் மற்றும் தாமஸ் வாசியோ ஆகியோர் ஆஸ்திரேலிய யு-19 அணியில் இடம்பெற்றுள்ளனர்.