கிரிக்கெட்

இந்திய வீரர் இஷான் கிஷன் சாதனை

முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.

புதுடெல்லி,

2026-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 42 ரன்கள் எடுத்த இஷான், ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

அந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன்கள் விளாச, இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இஷான் தற்போது நல்ல பார்மில் இருப்பது இந்திய அணிக்கும் முக்கியமான பலமாக அமைந்துள்ளது. சமீபத்தில் துலீப் கோப்பை இறுதிப்போட்டியிலும் அவர் 270 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.

SCROLL FOR NEXT