கிரிக்கெட்

இந்திய வீரர் ராகுல் சாதனை

இந்தியாவை சேர்ந்த முகமது அசாருதீன், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (136 ரன்) சதம் விளாசினார். நியூசிலாந்து மண்ணில் அவரது முதல் சதம் இதுவாகும். ஏற்கனவே அவர் தென்ஆப்பி ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் செஞ்சுரி அடித்து இருந்தார். இதன் மூலம் 34 வயது லோகேஷ் ராகுல் ,தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரே லியா ஆகிய நான்கிலும் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை படைத்தார். அத்து டன் 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னதாக இந்தியாவை சேர்ந்த முகமது அசாருதீன், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.

இந்திய அணி

சாதனை படைத்த லோகேஷ் ராகுல் நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசுகையில், 'எனக்கு தொழில் நுட்பம் ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை. மிடில் வரிசையில் சுமார் 15 மாதங்கள் ஆடிய காலக்கட்டத்தில் பேட்டில் பந்து படுமாறு ஆடும் பழக்கம் அதிகரித்தது. ஆனால் பந்து ஸ்விங் மற்றும் சீம் ஆகும் சூழ்நிலைகளில் பேட்டுக்கும். பந்துக்கும் இடையே குறைந்த தொடர்பை வைப்பதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.

நியூசிலாந்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே வந்து சேர்ந்தேன். இந்தியா 'ஏ' போட்டியில் அதிக ரன்கள் எடுக்காவிட்டாலும், வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் செலவிட்டு ரன்கள் எடுப்பது எப்படி என்பதை புரிந்துகொண்டேன். நீங்கள் கடினமான உழைக்கும் போது அது செயல்திறனாக மாறும். நியூசிலாந்து மண்ணில் நான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். உலகின் சிறந்த பந்து வீச்சுக்கு எதிராக என்னை சோதித்து பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தயாரானேன். ஆடுகளம் சுழற்பந்து வீச் சுக்கு அனுகூலமாக மாறும் அறிகுறி தெரிகிறது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT