கிரிக்கெட்

இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

லண்டன்,

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதல் டி20 ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது.155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றி இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. இந்த நிலையில், அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் உள்ள டர்கம் நகருக்கு சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 நாளை நடைபெற உள்ளது.