தரம்சாலா,
இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இமாசலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி ரஹ்மதுல்லா குர்பாஸ் சதமடித்தார். இந்தியா சார்பில் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் தனது 18-வது ஒருநாள் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம் இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கேப்டன் சுப்மன் கில் 66 பந்தில் 84 ரன்னும், கே.எல்.ராகுல் 19 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர்.
இந்த நிலையில், வெற்றி தொடர்பாக கில் கூறியதாவது,
இது ஒரு டி20 போட்டி போல இருந்தது. நாங்கள் மிக சிறப்பாக பந்து வீசினோம். அறிமுக வீரர்களான குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே ஆகிய இருவரும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். அவர்கள் பந்துவீச்சு மெய்சிலிர்க்க வைத்தது. ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்கள் முக்கியமானது. நாங்கள் இந்த ஓவர்களில் அழுத்தத்தைக் கொடுத்தோம் என தெரிவித்தார்.