கிரிக்கெட்

இலங்கையில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இத்தொடர், ஐசிசி (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–2027 சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 19ம் தேதி தொடங்க உள்ளது.இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது