மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வேயில் சுற் றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டி20 போட்டிகள் முறையே ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது.
கடைசியாக 2024-ம் ஆண்டு இந்திய அணி, ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் தொடரில் விளையாடி அதில் 4-1 என்ற கணக்கில் வென்று இருந்தது.