மெக்சிகோ
எஸ் -11 பிரிவில் 200 மீட்டர் மெட்லே போட்டியில் 26 வயதான ரிசர்வ் வங்கியின் ஊழியர் பாண்டே தங்கம் வென்றார்.மேலும் பெண்கள் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர் இவர் ஆவார்
துரதிருஷ்டவசமாக, அவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தவறவிட்டார், பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 5 வது இடத்திற்கு வந்தார்.
இது குறித்து காஞ்சன்மலா பாண்டே கூறியதாவது:-
நான் உலக சாம்பியன்ஷிப்பை எதிர்பார்த்து நன்கு தயாராகி இருந்தேன். மெக்ஸிகோவில் ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்தேன், ஒரு பதக்கம் கிடைத்தது., உலக சாம்பியன்ஷிப்பில் முதல் நிலை மற்றும் ஒரு தங்க பதக்கம் பெறுவது வியப்புக்குரியது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரத்தில், அதை வார்த்தைகளில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என கூறினார்.