கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

15 பேர் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

மும்பை,

மகளிர் டி20 உலகக்கோப்பை வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

ஹர்மன் ப்ரீத் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா, பார்தி புல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீசரணி, யஸ்திகா, நந்தினி, அருந்ததி ரெட்டி, ரேணுகா, கிராந்தி கௌட், ஷ்ரேயங்கா பாட்டில், ராதா யாதவ் அணியில் உள்ளனர்.