கிரிக்கெட்

ஐபிஎல்: 2 வருடம் தடை விதியை மறுயோசனை வேண்டும்: கவாஸ்கர்

டெல்லி அணி வீரர் பென் டக்கெட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார் .

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கிநடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், டெல்லி அணி வீரர் பென் டக்கெட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார் . இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் அவர் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட்டை டெல்லி அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

பென் டக்கெட் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிருந்து விலகியுள்ளதால் அவருக்கு அடுத்த 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது.


ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதி. அதன்படி, பென் டக்கெட் அடுத்த இரு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் இதுபோல் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவருக்கும் 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த தடை தொடர்பாக இந்திய அணி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது,

பென் டக்கெட் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடினார். The Hundred தொடருக்கான ஏலத்தில் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவ்வாறு எடுக்கவில்லை என்றால், வேறுமாதிரி இருந்திருக்கலாம். அவர் ஐபிஎல் தொடரை தவற விடுவதற்கும், டெஸ்ட் அணியில் கவனம் செலுத்தப் போவதாக கூறப்படுவதனாலும் மகிழ்ச்சியாகவே இருந்திருப்பார். ஏனென்றால் தி ஹன்ட்ரெட் தொடரில் விளையாடுவதற்கான நல்ல பணம் கிடைக்கிறது.

இரண்டு ஆண்டுத் தடை என்பது எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறோம். உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நடவடிக்கையைத்தான் நாம் பரிசீலிக்க வேண்டும். தடையானது சம்பந்தப்பட்ட வீரரின் மீதோ அல்லது அவர் மீண்டும் திரும்பும் வாய்ப்புகளின் மீதோ எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வரையில், அது ஒருபோதும் பயன்தராது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.