கிரிக்கெட்

’பர்ப்பிள் கேப்’ யாருக்கு? ரபாடா- பும்ரா இடையே கடும் போட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன.

தினத்தந்தி

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 2-ஆவது தகுதிச்சுற்று (குவாலிபயா-2) ஆட்டத்தில் சன்ரைசாஸ் ஹைதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் ரபாடா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்த ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 29 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் ரபாடா. அதேவேளையில் 27 விக்கெட்டுகள் எடுத்துள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா 2-ம் இடத்தில் உள்ளார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க ரபாடா - பும்ரா இடையே கடும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து