கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் - லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை

சன் ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஒரு போட்டியில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி அந்த போட்டியின் தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

முதல் வெற்றியை பெற ஐதராபாத் அணியும் வெற்றி பாதையை தொடர லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.