கிரிக்கெட்

ஐ.பி.எல். 2027 ஏலம்: அடிப்படை விலையை அறிவித்த 14 இந்திய வீரர்கள்!

எந்த அணிகள் வாங்க ஆர்வம் காட்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐ.பி.எல். 2027 மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளும் தங்களது அணியின் தேவைக்கேற்ப வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களான ஆவேஷ் கான், தீபக் சாஹர், உமேஷ் யாதவ் மற்றும் மயங்க் அகர்வால் போன்றவர்களை எந்த அணிகள் வாங்க ஆர்வம் காட்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐ.பி.எல்.

ஐ.பி.எல். 2027-ம் ஆண்டு மினி ஏலத்துக்கான ஆரம்ப வீரர்கள் பட்டியலில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய 14 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் என பல்வேறு திறமைகளைக் கொண்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக ஆவேஷ் கான் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் தலா ரூ.2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். மற்ற வீரர்கள் ரூ.1 கோடி மற்றும் ரூ.75 லட்சம் பிரிவுகளில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

அடிப்படை விலை விவரம்:

  1. ஆகாஷ் தீப் – ரூ.1 கோடி

  2. ஆவேஷ் கான் – ரூ.2 கோடி

  3. தீபக் சாஹர் – ரூ.2 கோடி

  4. தீபக் ஹூடா – ரூ.75 லட்சம்

  5. ஜெய்தேவ் உனட்கட் – ரூ.1 கோடி

  6. கருண் நாயர் – ரூ.75 லட்சம்

  7. குல்தீப் சென் – ரூ.75 லட்சம்

  8. மயங்க் அகர்வால் – ரூ.75 லட்சம்

  9. ராகுல் திரிபாதி – ரூ.75 லட்சம்

  10. சாரன்ஷ் ஜெயின் – ரூ.75 லட்சம்

  11. சிவம் மாவி – ரூ.75 லட்சம்

  12. துஷார் தேஷ்பாண்டே – ரூ.1 கோடி

  13. உமேஷ் யாதவ் – ரூ.1 கோடி

  14. உம்ரான் மாலிக் – ரூ.75 லட்சம்

SCROLL FOR NEXT