கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

சென்னை சூப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன. இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும்.

ஆமதாபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ஆமதாபாத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 66-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன. இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும். 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 'பிளே-ஆப் வாய்ப்பில் லேசாக தொங்கிக் கொண்டிருக்கிறது. கடைசி இரு ஆட்டங்களில் (லக்னோ, ஐதராபாத்துக்கு எதிராக) அடுத்தடுத்து தோற்றது பின்னடைவாகி விட்டது.

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 8 வெற்றி, 5 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று வீறுநடை போட்டது. புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களில் உள்ள அணிகளுக்கு இறுதிப்போட்டியில் நுழைய இரு வாய்ப்பு கிட்டும். அந்த வகையில் இந்த ஆட்டம் குஜராத்துக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் சென்னையை வீழ்த்தி டாப்-2 இடத்தை உறுதி செய்ய தீவிரம் காட்டுவார்கள். உள்ளூரில் ஆடுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கு நடந்த கடைசி 3 ஆட்டங்களில் குஜராத் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி குஜராத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

சென்னை:

சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, மேத்யூ ஷார்ட், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்நீத் சிங்.

குஜராத்:

சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), நிஷாந்த் சிந்து, ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஜாசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், முகமது சிராஜ், ககிசோ ரபடா, அர்ஷத் கான்.