கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவுடன் இன்று மோதல்; வெற்றி பெறும் முனைப்பில் லக்னோ

பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி, ஐதராபாத், சென்னை, மும்பை, லக்னோ, குஜராத், டெல்லி அணிகளுக்கு எதிராக 6 வெற்றிகளை பெற்றுள்ளது.

லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

லக்னோ அணி 9 ஆட்டங்களில் ஆடி, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக 2 வெற்றிகளை பெற்றுள்ளது. எனினும், 7 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்றுள்ள அந்த அணியின் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.

பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி, ஐதராபாத், சென்னை, மும்பை, லக்னோ, குஜராத், டெல்லி அணிகளுக்கு எதிராக 6 வெற்றிகளை பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

லக்னோ: மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்க்ரம், அக்ஷத் ரகுவன்ஷி, ஹிம்மாத் சிங், முகமது ஷமி, மொஷின் கான், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், எம்.சித்தார்த்.

பெங்களூரு: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ரொமாரியோ ஷெப்பர்டு, வெங்கடேஷ் அய்யர், புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.