கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ரஷித் கான், முகமது சிராஜ், ரபாடா, அசோக் ஷர்மா, பிரசித் கிருஷ்ணா.

மும்பை இந்தியன்ஸ்: டேனிஷ் மாலேவார், குவிண்டன் டி காக், நமன் திர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), திலக் வர்மா, ரூதர்போர்டு, மிட்செல் சான்ட்னர், கிரிஷ் பகத், ஜஸ்பிரித் பும்ரா, முகமது கசன்பர்.