கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

தற்போது தொடங்கி உள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நியூசண்டிகார்,

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் தற்போது தொடங்கி உள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டியில் தோல்வி காணும் அணி போட்டியில் இருந்து வெளியேறி விடும். வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத்துடன் மோதும். இவ்விரு அணிகளும் இந்த சீசனில் 2 முறை லீக்கில் மோதி இருக்கின்றன. இரண்டு ஆட்டங்களிலும் முறையே 57 ரன்கள், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் ஐதராபாத்தும், 9-ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன.

போட்டி நடக்கும் நியூ சண்டிகாரில் இந்த சீசனில் 4 ஆட்டங்கள் நடந்து இருக்கின்றன. இதில் 6 இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த முறையும் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.