லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
லக்னோ: மிட்செல் மார்ஷ், ஆயுஷ் பதோனி, ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்க்ரம், நிகோலஸ் பூரன், முகுல் சவுத்ரி, முகமது ஷமி, மொஷின் கான், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, மயங்க் யாதவ்.
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, துருவ் ஜூரெல், ரியான் பராக் (கேப்டன்), ஹெட்மயர், டோனவன் பெரேரா, ஜடேஜா, ஜோப்ரா ஆர்ச்சர், நன்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய்.