மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தி யாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான் கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன.
மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது. அதன் பிறகு டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப் அணிகளி டம் வரிசையாக தோற்றது. கடந்த ஆட்டத்தில் 99 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை பந்தாடி எழுச்சி பெற்றது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சொதப்பி வந்த திலக் வர்மா (101 ரன்) முந்தைய ஆட்டத்தில் சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டது டன், நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு நமன் திர் (45 ரன்) பக்கபலமாக இருந்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. குயின்டான் டி காக் (இரு ஆட்டங்களில் ஆடி சதம் உள்பட 125 ரன்) சிறப்பான நிலையில் இருக்கிறார். ஆனால் சூர்யகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரது முழு திறமை இன்னும் வெளிப்படவில்லை.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் இப்போது தான் அணியினரு டன் இணைந்து இருக்கிறார். பயிற்சியை தொடங்கியுள்ள அவர் இன் றைய ஆட்டத்தில் களம் இறங்க வாய்ப்புள்ளது. தசைப்பிடிப்பு காரண மாக கடந்த 2 ஆட்டங்களை தவறவிட்ட ரோகித் சர்மா அணிக்கு திரும்பு வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இது அந்த அணிக்கு வலுசேர்க்கும். பந்து வீச்சில் அஸ்வனி குமார், கசன்பார், மிட்செல் சான்ட்னெர் நம் பிக்கை அளிக்கின்றனர். முதல் 5 ஆட்டங்களில் விக்கெட் இன்றி ஏமாற் றம் அளித்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தியது அந்த அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் 3 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ் சாப், பெங்களூரு அணிகளிடம் தோல்வியை தழுவியது. அடுத்து டெல்லி, கொல்கத்தா அணிகளை வென்றது. கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்திடம் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் தொடர்ந்து ஏற்றம் காண முடியவில்லை. பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் (192 ரன்), சர்ப்ராஸ் கான் (147), ஷிவம் துபே (123) ஓரளவு கைகொடுக்கின்றனர். ஆயுஷ் மாத்ரே (201) காயத்தால் விலகி இருப்பது அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும். பந்து வீச்சில் அன்ஷூல் கம்போஜ் (13 விக்கெட்), ஜாமி ஓவர்டான், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி வலு சேர்க்கிறார்கள். ஆனால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருங்கி ணைந்து செயல்பட்டால் தான் சரிவில் இருந்து மீண்டு வர முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
முன்னாள் கேப்டன் டோனி வழக்கம் போல் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். அவர் இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது குறித்து அணி நிர்வாகம் உறுதி செய்யவில்லை. 'டோனி களம் இறங்க முழுமையாக தயாராக இருக்கும் பட்சத்தில், அவரும், மருத்துவ கமிட்டியும் இணைந்து இன்று அது குறித்த முடிவை எடுப்பார்கள்' என சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமோன்ஸ் தெரிவித்தார்.
ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை, மும்பை அணிகள் மோதினாலே எப்போதும் எதிர்பார்ப்பு எகிறும். அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 39 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 21-ல் மும்பையும், 18-ல் சென்னையும் வென்று இருக்கின்றன. வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் 13 முறை சந் தித்ததில் மும்பை 8-5 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா அல்லது தனிஷ் மலிவார், நமன் திர், சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரூதர்போர்டு அல்லது வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னெர், கிரிஷ் பகத், ஜஸ்பிரித் பும்ரா, கசன்பார், அஸ்வனி குமார்.
சென்னை: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட் டேல், மேத்யூ ஷார்ட் அல்லது டோனி, சர்ப்ராஸ் கான், டிவால்ட் பிரே விஸ், ஷிவம் துபே, ஜாமி ஓவர்டான், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி அல்லது மேட் ஹென்றி, குர்ஜப்னீத் சிங்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.