கிரிக்கெட்

ஐபிஎல்: அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவாரா?

தோனி தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தோனி இந்த சீசனில் நடைபெறும் அனைத்து ஆட்டத்திலும் விளையாடுவார் என்று சி.எஸ்.கே. அணி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறியதாவது,

என்னை பொறுத்தவரை தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். இது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அணி நிர்வாகம் அவரிடம் ஆலோசித்து அவரது பங்கு குறித்து இறுதி முடிவு எடுக்கும்.

தோனி பேட்ஸ்மேனாக ஆடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருப்பாரா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். என தெரிவித்துள்ளார்.