கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை அணியில் இணைந்த வேகப்பந்துவீச்சாளர்

நாதன் எல்லிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

சென்னை அணியின் முக்கிய வீரர் நாதன் எல்லிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்த நிலையில், நாதன் எல்லிஸ்-க்கு பதிலாக மாற்று வீரரை சென்னை அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்பன்சர் ஜான்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.