ஐதராபாத்,
ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஐதராபாத் அணியின் கேப்டன் யார் ? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில், ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அபிஷேக் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.