ஐதராபாத்,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரரான கிளாசன் அரை சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஹென்ரிச் கிளாசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 11 ஆட்டங்களில் 476 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அபிஷேக் சர்மா 475 ரன்னும், 3வது இடத்தில் கே.எல்.ராகுல் 445 ரன்னும் குவித்துள்ளனர்.