கிரிக்கெட்

ஐபிஎல்: ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய கிளாசன்

கிளாசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார்.

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட் டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்தப் போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 49வது லீக் ஆட்டத் தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 235 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் கிளாசான் 55 ரன்களும் , இஷான் கிஷன் 69 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில், ஹென்ரிச் கிளாசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 11 ஆட்டங்களில் 476 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.இரண்டாவது இடத்தில் அபிஷேக் சர்மா 475 ரன்னும், 3வது இடத்தில் கே.எல்.ராகுல் 445 ரன்னும் குவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT