கிரிக்கெட்

ஐபிஎல் மெகா ஏலம்: அணியில் தக்கவைக்கப்பட ரூ.40 கோடி கேட்கும் நட்சத்திர வீரர்கள்

ரூ.40 கோடி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே அணிகளில் தக்கவைக்கப்படும் முன்னணி வீரர்கள் தங்களுக்கான சம்பளமாக ரூ.40 கோடி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நட்சத்திர வீரர்கள்

குறைந்தது இரண்டு நட்சத்திர வீரர்கள் தங்களது அணிகளிடம் இந்தத் தொகையைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஒரு வீரரின் ரூ.40 கோடி கோரிக்கைக்குக் கேப்டன் பொறுப்பும் முக்கியக் காரணமாக இருப்பதாககூறப்படுகிறது. ஏற்கெனவே 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

அதிகமாக செலவாகும்

அடுத்த மெகா ஏலத்திற்கான அணிகளின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.150 கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு வீரருக்கே ரூ.40 கோடி வழங்கினால் அணியின் மொத்த பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமாக செலவாகும். இதனால் மற்ற முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் அணிகளுக்குச் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும், வீரர்களுக்கான சம்பளம் மற்றும் தக்கவைப்பு விதிமுறைகள் குறித்து பிசிசிஐ எடுக்கும் இறுதி முடிவைப் பொறுத்தே இந்தக் கோரிக்கைகள் நடைமுறைக்கு வருமா என்பது தெரியவரும்.

SCROLL FOR NEXT