கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை அணியில் இணைந்த நூர் அகமது

10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது அணியில் இணைந்துள்ளார். அவர் இன்று முதல் பயிற்சியை தொடங்கி உள்ளார்.

சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் 30ம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.